Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அக்., நவ., மாதங்களில் ஐதராபாத்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்! நேரத்தை குறிச்சிக்கோங்க!

அக்., நவ., மாதங்களில் ஐதராபாத்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்! நேரத்தை குறிச்சிக்கோங்க!
ஐதரபாத் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

பயணிகள் நெரிசலை தவிர்க்க அக்டோபர், நவம்பர் மாதங்களில் சார்லப்பள்ளி(ஐதராபாத்)-திருவண்ணாமலை இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

பயணிகள் நெரிசலை தவிர்க்க அக்டோபர், நவம்பர் மாதங்களில் சார்லப்பள்ளி(ஐதராபாத்)-திருவண்ணாமலை இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சார்லப்பள்ளியில் இருந்து அக்.6, 13, 20, 27, நவ.3, 10, 17 தேதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07003), மறுநாள் புதன்கிழமைகளில் காலை 8 மணிக்கு திருவண்ணாமலை போய்ச்சேரும்.

அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து அக்.7, 14, 21, 28, நவ.4, 11, 18 தேதிகளில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07004), மறுநாள் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30மணிக்கு சாரலப்பள்ளி சென்றடையும்.

இந்த ரயில்கள் காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, ராஜம்பேட்டை, கடப்பா, யெர்லகுண்ட்லா, தாடிபத்ரி, குத்தி, தோனே, கர்நூல் சிட்டி, கத்வால், வான்பர்தி ரோடு, மஹபூப்நகர், சாத்நகர், காச்சிகுடா ஆகிய ரயில்நிலையங்களில் நிற்கும்.

முந்தைய செய்தி
அறுபடை முருகன் கோயில்களுக்கு ரயில் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
அடுத்த செய்தி
Line block in October Change in the pattern of 17 Trains

தொடர்புடைய செய்திகள்